Posts

வீட்டு மனை மற்றும் நில ஒப்படை பற்றிய சில குறிப்புகள்

  ஒப்படை (ASSIGNMENT): வீடு மற்றும் நிலமற்ற ஏழை மக்களுக்கும் நலிந்த பிரிவினருக்கும், நாட்டுக்கு  உழைத்திட்ட போர் வீரர்கள் குடும்பத்தினருக்கும் மற்ற இதர தகுதி வாய்ந்த பிரிவினருக்கும் அரசு நிலங்களை வீட்டு மனைகளாகவோ அல்லது விவசாயத்திற்காக வழங்குவதோ நில ஒப்படை எனப்படும். வீட்டு மனை ஒப்படை: வருவாய் நிலை ஆணை எண் 21 பிரிவு 1ன்படி பொது உபயோகத்திற்கு தேவைப்படாத அரசு நிலங்களை வீட்டுமனை இல்லாதவர்களுக்கு ஒப்படை செய்வது வீட்டுமனை ஒப்படை எனப்படும். வீட்டு மனை ஒப்படை செய்வதற்கு முன்பு கீழ்க்காணும் முன்னேற்பாடுகள் செய்யப்பட வேண்டும். 1. வீட்டு மனை இல்லாத தகுதி வாய்ந்த நபர்களை கிராம வாரியாக தயார் செய்ய வேண்டும். 2. தகுதியான நபர்களிடமிருந்து வரப்பெறும் மனுக்களை ஆய்வு செய்து அரசு விதி முறைகளுக்கு ஏற்ப முன்னுரிமை அடிப்படையில் ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும். 3. வீட்டுமனை ஒப்படைக்கு தகுதியான ஆட்சேபனையற்ற அரசு நிலங்களை தேர்வு செய்து கொள்ளவேண்டும். 4. தகுதியான நிலங்களை தேர்வு செய்து முன் கூட்டியே வரைபடம் தயார் செய்து நில அளவர் மூலம் பிளாட்டுகளாகப் பிரித்து கற்கள் நடப்பட வேண்டும். வருவாய் நிலை ஆணை எண...